டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதியில் கால் பதித்த பி.வி.சிந்து, சதீஷ்குமார்…வெற்றிப்பாதையில் ஆடவர் ஹாக்கி டீம்..!!

Author: Aarthi Sivakumar
29 July 2021, 12:12 pm
Quick Share

டோக்கியோ: 32வது ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பாட்மின்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆடவர் குத்துச்சண்டையில் சதீஷ்குமாரும் காலிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், பாட்மின்டன் லீக் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ‘ஜே’ பிரிவில் இடம் பெற்றிருந்தார். முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, தனது மூன்றாவது போட்டியில் டென்மார்க்கின் பிலிச்பெல்ட்டை எதிர்கொண்டார்.

துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறவுள்ள காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதவுள்ளார்.

அதேபோல், ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார், ஜமைக்கா வீரர் பிரவுனை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். உஜ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பகோடிர் ஜலோலோவை சந்திக்கிறார். இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

காலிறுதிக்கு முந்தைய போட்டியில் அர்ஜெண்டினா உடன் மோதிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஆடவர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Views: - 421

1

0