டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்…பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து..!!

Author: Aarthi
1 August 2021, 6:35 pm
Quick Share

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்துள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில், பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து உலகின் ‛நம்பர்-9′ வீராங்கனையான சீனாவின் ஹி பிங் ஜியாவோ உடன் மோதினார்.

ஆட்டத்தின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இரண்டாவது செட்டில் ஜியாவோ சற்று சவால் கொடுத்தாலும், சிறப்பாக எதிர்கொண்ட சிந்து அந்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

latest tamil news

இறுதியில் 21-13, 21-15 என்ற நேர்செட்டில் வெற்றிப்பெற்று அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் சிந்து வெண்கலப் பதக்கத்துடன் இந்த ஒலிம்பிக்கை நிறைவு செய்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்தது. ஏற்கனவே பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்துள்ளது.

Views: - 285

0

0