கடவுளுக்கு கொஞ்சம் கருணை இருக்கு…உருக்கமான பதிவை வெளியிட்ட அஸ்வின்!

12 May 2021, 7:51 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடவுளுக்கு கொஞ்சம் கருணை இருக்கிறது என்று உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். சமீபத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் என்-95 முகக்கவசங்களை அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸுன் இரண்டாவது அலை மிக மோசமாகவே பரவியுள்ளது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் என்ற விகிதத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல இதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்காமல் தடுக்க பல மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “எல்லாம் முடிந்தது என்று என்னை எழுப்புங்கள். இன்னும் எத்தனை மக்களோ? தயவு செய்து முக கவசம் அணிந்து விடுங்கள். முகக்கவசம் அணியாமல் இருப்பது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாது விரைவில் குற்றமாக மாற உள்ளது. கடவுளுக்கு கொஞ்சம் கருணை உள்ளது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வைரஸின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மே 10ஆம் தேதி முதல் 24 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்விப் தனது குடும்பத்தார் பாதிக்கப்பட்டதையடுத்த் சென்னையில் நடந்த போட்டியுடன் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருந்தார். இதற்கிடையில் இங்கிலாந்தில் நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க ரவிச்சந்திரன் அஸ்வின் விரைவில் இங்கிலாந்து செல்ல உள்ளார்.

இதற்காக மும்பையில் பிசிசிஐ ஏற்பாடு செய்யதுள்ள இடத்தில் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையே சுமார் 40 நாட்கள் நீண்ட இடைவெளி உள்ளது வரும் ஜூன் 18 முதல் 22 வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி துவங்கி செப்டம்பர் 14 வரை நடக்கிறது.

Views: - 260

0

0