இனவெறிக்கு எதிர்ப்பு : புதுவிதமான ஜெர்சியில் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்..!

29 June 2020, 5:58 pm
west indies 2 - updatenews360
Quick Share

இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி புதுவிதமான ஜெர்சியில் களமிறங்க இருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வரும் 8ம் தேதி தொடங்க இருக்கிறது.

இதனிடையே, அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை, நடுரோட்டில் போலீஸ்காரர் ஒருவர் தனது காலால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை தூண்டியது.

இதையடுத்து, விளையாட்டு, சினிமா போன்ற துறைகளிலும் இனவெறியை எதிர்கொண்டதாக பலர் மனக்குமுறல்களை வெளிக் கொட்டி வருகின்றனர்.

அதேவேளையில், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் போது, வீரர்கள் முழங்காலை தரையில் ஊன்றி, இனவெறிக்கு எதிரான எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களின் ஜெர்சியில் ‘Black Lives Matter’ என்ற லோகாவை அணிந்து விளையாட இருக்கிறார்கள். இதற்கு ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply