இவரை மாதிரி ஒருத்தர் இருந்தால் தினம் தினம் கற்றுக்கொண்டே இருக்கலாம்: ரகானே!

1 February 2021, 6:44 pm
rahane - updatenews360
Quick Share

இந்திய கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கேப்டன் ரகானே இந்திய அணியின் வெற்றியில் முன்னாள் வீரர் டிராவிட்டின் பங்கு அதிக அளவில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால், அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளதாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், சார்துல் தாகூர் மற்றும் நடராஜன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கோட்டையாக திகழ்ந்த பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றி பெற பெரிய அளவில் கை கொடுத்தனர்.

இந்நிலையில் இந்திய இளம் வீரர்கள் அனுபமற்ற நிலையிலும் இப்படி சிறப்பாக செயல்பட டிராவிட் தான் காரணம் என பலரும் பாராட்டினர். ஆனால் இந்த பெருமையை டிராவிட் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியின் 19வயதுக்கு உட்பட்டோ மற்றும் இந்திய ஏ அணியின் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களை சிறந்த முறையில் டிராவிட் வழி நடத்தியுள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற வெற்றியில் டிராவிட்டின் பங்கு மிகப் பெரியது என கேப்டன் ரகானே பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில், “ராகுல் பாய் பங்கு இந்த வெற்றியில் மிகப் பெரிய அளவில் உள்ளது. அவர் இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்களை சிறந்த முறையில் தேர்ச்சி செய்து வருகிறார். இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி முறைகள் முகமது சிராஜ் மற்றும் சாய்னி ஆகியோருக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளதை நம் கண்முன்னே பார்த்தோம்.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பாக மயங்க் அகர்வால், சுப்மான் கில் போன்ற வீரர்கள் இந்திய ஏ அணியில் விளையாடி உள்ளனர். உள்ளூர் தொடர்களிலும் சிறந்த அளவில் ரன்கள் சேர்த்துள்ளார். இவர்கள் இப்படி சிறப்பாக செயல்பட ராகுல் பாய் தான் முக்கிய காரணம். லாக் டவுன் காலத்தில் அனைவரும் தேசிய கிரிக்கெட் அகடமியில் சென்று பயிற்சி மேற்கொண்டோம். அங்கு டிராவிட் போல ஒருவர் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேதான் இருப்போம்.

மெல்போர் வெற்றிக்கு பின்பாகவும் பிரிஸ்பேன் போட்டி முடிந்தவுடனும் ராகுல் பாய் உடனடியாக எனக்கு மெசேஜ் அனுப்பினார். இப்படி ஒரு அணியை உருவாக்கியதற்கு கண்டிப்பாக அவர் பெருமை கொள்ள வேண்டும்” என்றார்.
ஆனால் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்பாக இந்த அனுபவம் மற்ற வீரர்கள் செய்யப்பட்ட விதத்திற்கு முழு காரணமும் நீங்கள்தான் என்று டிராவிட் இடம் தெரிவித்த போது, “இது தேவையில்லாத புகழ்ச்சி. அவர்களுக்குத்தான் இந்த அனைத்து பெருமையும் சேரவேண்டும்”என்று டிராவிட் கூறியிருந்தார்.

Views: - 25

0

0