மாலத்தீவில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட ரெய்னா : குடும்பத்துடன் உற்சாகம்!!

29 November 2020, 2:22 pm
Raina - Updatenews360
Quick Share

இந்திய அணியில் பெஸ்ட் ஆல்ரவுண்டரக திகழ்ந்தவர் சுரேஷ்ரெய்னா. தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தோனியும் ரெய்னாவும் சேர்ந்தாலே அந்த போட்டி ஆரவாரமாக இருக்கும்.

தோனியின் சிறந்த நண்பனாக விளங்கிய ரெய்னா, சமீபத்தில் அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சுரேஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து மறுநாளே ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தாலும், ஐபிஎல்லில் தோனி இருக்கிறார் என்று ஆறுதல் அடைந்தனர்.

 சுரேஷ் ரெய்னா தனது 34-வது பிறந்தநாளை மாலத்தீவில் உற்சாகமாக கொண்டாடினார்.

ஆனால் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி இந்த முறை சொதப்பலான ஆட்டங்களில் வெளியேறியது. தோனியின் சக நண்பனான ரெய்னா தொடரில் பங்கேற்காதது அதிர்ச்சி அளித்தது.

 மாலத்தீவில் குடும்பத்தினருடன் சுரேஷ் ரெய்னா

இந்த நிலையில் ரெய்னா தனது 34வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சுரேஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 அதில் பிறந்தநாள் அன்று ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவை ரம்மியமான இடத்தில் எடுத்து கொண்டேன் என்றுள்ளார்.

அதில் பிறந்தநாள் அன்று ஆரேக்கியமான மற்றும் சுவையான காலை உணவை ரம்மியமான இடத்தில் எடுத்துக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் மகள்களுடன் உற்சாகமாக கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Views: - 0

0

0