ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிரிக்கெட் இயக்குனராக சங்ககரா நியமனம்!
24 January 2021, 8:20 pmராஜஸ்தான்ன் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனராக முன்னாள் இலங்கை வீரரான குமார் சங்ககரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககரா. இவர் இலங்கை அணிக்காக 16 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய சுமார் 28 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதேநேரம் கடந்த 46 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் சிறந்த சராசரி கொண்டு வீரர் குமார் சங்ககரா தான்.
இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை தங்கள் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது. சங்ககரா மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி) தற்போதைய தலைவராகவும் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமித்தது. இந்நிலையில் சங்ககரா நியமனம் குறித்து கேப்டன் சாம்சன் கூறுகையில், “சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் சங்ககரா. எங்கள் அணியில் சங்ககரா இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தெரிந்த அளவு சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்தவர் சங்ககரா தான். அதேநேரம் களத்திற்கு வெளியிலும் உள்ளேயும் சிறந்த பண்பு கொண்டவராக இருந்துள்ளார் சங்ககரா. இந்நிலையில் இவரின் வருகை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் என நம்புகிறேன்”என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்த முக்கியமான காரணம் கடந்த ஆண்டில் ராஜஸ்தான் அணி செயல்பட்ட விதம் தான் என பரவலாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலரையும் ஐபிஎல் அணிகள் விடுவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
0
0