சிக்சர் மழை பொழிந்த மோரீஸ்…!!கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றியை பறித்த ராஜஸ்தான்..!!

15 April 2021, 11:49 pm
Quick Share

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின. இஇதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ரிஷப் பண்ட் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினர். அவர் 32 பந்தில் 9 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார்.

அப்போது டெல்லி 12.4 ஓவரில் 88 ரன்கள் எடுத்திருந்தது.லலித் யாதவ் 20 ரன்களும், டாம் கர்ரன் 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உனத்கட் 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜோஸ் பட்லர் மற்றும் மனன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மனன் வோக்ரா 9(11) ரன்னிலும், அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் 2 (7) ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 (3) ரன்னிலும், சிவம் துபே 2 (7) ரன்னிலும், ரியான் பராக் 2 (5) ரன்னிலும், ராகுல் திவாடியா 19(17) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 62 (43) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கிறிஸ் மோரிஸ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் கிறிஸ் மோரிஸ் 36 (18) ரன்களும், ஜெய்தேவ் உனத்கட் 11 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக அவிஷ் கான் 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது.

Views: - 32

0

0