நீண்டநாள் காதலியை மணந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கத்!

3 February 2021, 11:01 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜெய்தேவ் உனத்கத் தனது நீண்டநாள் காதலியான ரின்னியை மணந்துள்ளார்.

சவுராஸ்டிரா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜெய்தேவ் உனத்கத், தனது நீண்டநாள் காதலியான ரின்னியை குஜராத் மாநிலம் அனந்த் மாநிலத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் நிச்சயம் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் லாக் டவுனுக்கு முன்பாக நடந்தது. சமீபத்தில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் உனத்கத் சவுராஸ்டிரா அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை தங்கள் அணி தக்கவைத்துக் கொண்டது. உனத்கத் – ரின்னியின் திருமணம் குஜராத்தின் அனந்த் மாநிலத்தில் உள்ள மதுபன் ரிசார்ட்டில் நடந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலைத் தனது டிவிட்டர் பக்கம் மூலம் உனத்கத் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தவிர, டையடீசியன் மற்றும் உனத்கத்தின் நெருங்கிய நண்பருமான கோமல் படேலும் உனத்கத்தின் திருமண புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் முடிந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் டி பிரிவில் இடம் பெற்றிருந்த ராஜஸ்தான் அணி அரையிறுதி வரை முன்னேற உனத்கத் உதவினார். இவர் இந்த தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட் வீழ்த்தினார். கடந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 7 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார்.

Views: - 0

0

0