ரஞ்சி போட்டியையும் அவுட்டாக்கிய குடியுரிமை சட்டத்திருத்தம்..! ஆட்டங்கள் அதிரடி ரத்து

13 December 2019, 12:01 am
Quick Share

கவுகாத்தி: அசாம், திரிபுரா மாநிலங்களின் வன்முறைக்களமாக மாறி இருப்பதால் அங்கு நடைபெற இருந்த ரஞ்சி போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குடியுரிமைத் சட்டத் திருத்தம் நிறைவேறியதால் வடகிழக்கு மாநிலங்கள் வெப்ப பந்துகளாக உருண்டு கொண்டிருக்கின்றன. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் கலவரத்தீ கொளுந்துவிட்டு எரிகிறது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

இந் நிலையில், அசாம், திரிபுராவில் நடைபெற இருந்த ரஞ்சி போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

வேறு மாநில மைதானங்களில் போட்டி நடத்தப்படுமா அல்லது புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படுமா என்பது பற்றி தெரியவில்லை. விரைவில் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறி இருக்கின்றனர்.

1 thought on “ரஞ்சி போட்டியையும் அவுட்டாக்கிய குடியுரிமை சட்டத்திருத்தம்..! ஆட்டங்கள் அதிரடி ரத்து

Comments are closed.