அதெல்லாம் முடியாது… கேப்டன் பதவியை உதறித்தள்ளிய ரஷித்கான் : ஆப்கன் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
10 September 2021, 11:14 am
rashid khan - updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க ரஷித்கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்.,17ம் தேதி முதல் நவ.,14ம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் தங்கள் அணியின் வீரர்களின் விபரத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்களை பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. ரஷித்கான் கேப்டானாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான 20 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், டி20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்துள்ளார். அணியின் விபரத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, கேப்டன் என்ற முறையில் தன்னை அழைத்து பேசியிருக்க வேண்டும் என்றும், தன்னிடம் ஆலோசிக்காமல் அணி தேர்வு நடந்துள்ளதால், கேப்டன் பொறுப்பை ஏற்க முடியாது, எனக் கூறியுள்ளார்.

ரஷித்கானை சமரசம் செய்து மீண்டும் கேப்டனாக தொடர தேவையான நடவடிக்கைகளை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளுமா..? அல்லது புதிய கேப்டனாக முகமது நபி தேர்வு செய்யப்படுவாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 329

0

0