ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெங்களூரு: மறுபடி வீழ்ந்த கொல்கத்தா!!

18 April 2021, 7:20 pm
Quick Share

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் அரங்கின் வரலாற்றில் முதல் மூன்று போட்டிகளில் பெங்களூரு அணி முதல் முறையாக வெற்றி பெற்று அசத்தியது.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கும் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இரு மிகச்சிறந்த அணிகளுக்கு கேப்டனாக திகழும் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு, ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்தது . டிவிலியர்ஸ் (76), ஜேமின்சன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுமாரான துவக்கம்
இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நிதிஷ் ரானா (18), சுப்மான் கில் (21) சுமாரான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ராகுல் திருப்பதி (25), கேப்டன் இயான் மார்கன் (29) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. பின் வந்த தினேஷ் கார்த்திக் (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

ரசல் அதிரடி
தொடர்ந்து வந்த ஷாகிப் அல் ஹாசன், ஆண்ரே ரசல் ஆகியோர் ஓரளவு அதிரடி காட்டினர். ஆனால் அதற்குள் எட்டவேண்டிய இலக்கு இமயம் அளவு எட்டியது. ஷாகிப் 26 ரன்னில் ஜேமின்சன் வேகத்தில் போல்டானார். ஆண்ரே ரசல் 31 பந்தில் ஹர்சல் படேல் வேகத்திலும் அவுட்டாகினர். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டும் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஹாட்ரிக் வெற்றி
இந்த வெற்றீயின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 ஆண்டுகால வரலாற்றில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Views: - 73

0

0