முதலிடத்தில் நங்கூரமாக நீடிக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு …. நம்பர்-1 இடத்தில் ஷிகர் தவான்!!

19 April 2021, 9:14 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் நம்பர் -1 இடத்தில் நீடிக்கிறது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் நேற்று வரை 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்னில் வென்ற பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. பெங்களூரு அணி பங்கேற்ற மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் டாப் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பதைப் பார்க்கலாம். இந்நிலையில் பெங்களூரு அணி நம்பர்-1 இடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும், மும்பை அணி 3-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி ஆறாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏழாவது மற்றும் கடைசி இடத்தில் உள்ளன.

இதேபோல அதிக ரன்கள் விளாசிய வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் டெல்லி கேபிடஸ்ல் அணியின் ஷிகர் தவானிடம் உள்ளது. இவர் 3 போட்டியில் சேர்த்து 186 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கிளன் மேக்ஸ்வெல் (176) இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸின் கே எல் ராகுல் (157) மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா வீரர் நிதீஷ் ரானா (155) நான்காவது இடத்திலும், பெங்களூருவின் டிவிலியர்ஸ் (125) 5வது இடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களுக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப் ராயல் சாலஞச்ர்ஸ் பெங்களூரு வீரர் ஹர்ஷால் படேல் (9 விக்கெட்) வசம் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரகுல் சஹார் (7) பட்டியல் உள்ளார். மூன்றாவது இடத்தில் டெல்லியின் அவேஷ் கான் (6) நான்காவது இடத்தில் மும்பையின் டிரெண்ட் பவுல்ட் (6), ஐந்தாவது இடத்தில் கொல்கத்தாவின் ஆண்ரே ரசல் (6) ஆகியோர் உள்ளனர்.

Views: - 111

0

0