ஆர்.சி.பி.யின் வெற்றிக்கு அந்த வீரர் முக்கிய பங்காற்றுவார்..! கவாஸ்கர் கணிக்கும் வீரர் யார் தெரியுமா..?

18 September 2020, 4:25 pm
Quick Share

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர், இந்திய மக்களுக்கு சற்று நல்ல மனநிலையை கொடுக்கும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களை குஷிபடுத்தி, எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என அனைத்து அணியின் வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணியாக வலம் வரும் கோலி தலைமையிலான பெங்களூரூ அணியும் தீவிர பயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த முறையாவது கோப்பையை வென்று தங்கள் மீதும், தங்களது ரசிகர்கள் மீதான விமர்சனங்களை துடைக்க பெங்களூரூ அணி முயற்சிக்கும்.

இந்த நிலையில், இந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரூ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் வீரர், இவராகத்தான் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான கவாஸ்கர் கணித்து கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது :- பெங்களூரூ அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாதது பெரும் புதிராகவே இருக்கிறது. விராட் கோலி, டிவில்லியர் உள்ளிட்ட வீரர்கள் ரன் குவிப்பிற்கு பக்க பலமாக இருப்பார்கள். இவர்கள் சோபிக்க தவறினால், நடுத்தர வீரர்கள் ரன் குவிப்பதை தவறி விடுகின்றனர். இந்தாண்டு புதிய பயிற்சியாளரின் வருகை கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.

அதேவேளையில், பந்துவீச்சிற்கு உகந்த அமீரக மைதானங்களில் சஹாலின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும். இந்தாண்டு வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய வீரராக அவர் இருப்பார், எனக் கூறினார்.

இந்த ஆண்டு 21ம் தேதி ஐதராபாத் அணியை பெங்களூரூ அணியை எதிர்கொண்டு விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0