என் மனைவியை விட்டு விடுங்கள்… ஐபிஎல் தோல்வியால் ரசிகர்களிடம் கெஞ்சும் பெங்களூரூ அணி வீரர்..!!

Author: Babu Lakshmanan
12 October 2021, 3:58 pm
rcb - kkr - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முதல் வெளியேற்றுதல் சுற்று போட்டியில் பெங்களூரூ – கொல்கத்தா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இந்த ஆண்டும் பெங்களூரூக்கு பொய்த்து போனது.

ஆட்டத்தின் நடுப்பகுதி வரையில் பெங்களூரூ அணிக்கும் இருந்த வெற்றி வாய்ப்பை, டேன் கிறிஸ்டியன் வீசிய ஓவரில் 3 சிக்சர்களை அடித்து சுனில் நரேன் பறித்து விட்டார். இதனால், கிறிஸ்டியன் மீது பெங்களூரூ அணியின் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோபத்தை டேன் கிறிஸ்டியன் மனைவியிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளனர்.

Sunil Narine hits 3 Sixes | Sunil Narine Batting Today vs RCB | KKR Won  Eliminator 1 - YouTube

உங்கள் கணவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறச் சொல்லுங்கள், அவர் எல்லாம் ஒரு வீரரா..? என்றெல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வசைபாடியுள்ளனர்.

இதனால், நொந்து போன கிறிஸ்டியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது துணையின் இன்ஸ்டாகிராம் கமெண்ட் பகுதியைப் பார்த்தேன். இன்று (நேற்று) எனக்கு சிறப்பான ஆட்டமாக அமையவில்லை. ஆனால், அதுதான் விளையாட்டு. இருப்பினும் இதிலிருந்து அவரை விட்டுவிடுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணம் என்று கிறிஸ்டியனுக்கு ஆதரவாக கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே, தோல்வியால் துவண்டு போயுள்ள நேரத்தில் எங்கள் மீது குப்பைகளை கொட்டாதீர்கள் என பெங்களூரூ அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல்லும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற தனிமனிதர்களை குறி வைத்து தாக்கக் கூடாது என விளையாட்டு விமர்சகர்களும் தங்களின் பங்கிற்கு பெங்களூரூ அணி ரசிகர்களுக்கு புத்திமதி சொல்லி வருகின்றனர்.

Views: - 264

0

0

Leave a Reply