ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின் சாதனை வெற்றி.. அசத்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி !

Author: Udayaraman
1 August 2021, 8:44 pm
Quick Share

டோக்கியோ: டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கிப் பிரிவில் 41 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய ஹாக்கி அணியின் சார்பில் தில்பிரீத் சிங், ஹர்திக் சிங் மற்றும் குர்ஜந்த் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். கிரேட் பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்திய ஹாக்கி அணி வீரர்கள் தங்களின் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய ஹாக்கி அணி 7 வது நிமிடத்திலும், 16 வது மற்றும் 57 வது நிமிடத்தில் கோல் அடித்தது.சிந்துவின் வெற்றி அனைவருக்கும் மனநிறைவை கொடுத்த நிலையில் அதை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்தியா பலம் காட்டியது, 41 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஹாக்கியில், இந்திய அணி நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் வரலாற்றைப் படைத்துள்ளது. கிரேட் பிரிட்டனை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

Views: - 257

1

0