அதெல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ்… ஐபிஎல் தொடர் குறித்து ராஜஸ்தான் உரிமையாளர் மனோஜ் தகவல்!

13 May 2021, 9:22 pm
Quick Share

சர்வதேச அட்டவணை சிக்கல் உள்ளதால் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மறு அட்டவணையை திட்டமிடுவது மிகவும் சவாலான விஷயம் என ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் பதாலே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒத்தி வைப்பதைத் தவிர பிசிசிஐக்கு வேறு வழி இல்லாமல் போனது. இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை இந்த ஆண்டு இறுதியில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டதை போல தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான மனோஜ் பதாலே கூறுகையில், “சரியான காலம் மற்றும் அட்டவணைகள் தான் உண்மையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் மிகப்பெரிய சவால் என நினைக்கிறேன். ஏற்கனவே வீரர்கள் அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் உண்மையில் போட்டிகளுக்கான அட்டவணை தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனக்கு தெரிந்து இங்கிலாந்தில் அல்லது மிடில் ஈஸ்டில் போட்டிகளை செப்டம்பர் மாதம் நடத்த சிறு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதுவும் மிகவும் இக்கட்டான நிலை தான்” என்றார்.

Views: - 458

0

0