தல தோனியின் சாதனையைத் தகர்த்த ரிஷப் பண்ட்!

19 January 2021, 8:07 pm
pant - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையைத் தகர்த்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 89 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிதும் கைகொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி சுமார் 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாகத் திகழ்ந்த பிரிஸ்பன் மைதானத்தில் அந்த அணியை வீழ்த்தி புது வரலாறு படைத்தது.

மேலும் தொடரை 2 – 1 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையைத் தகர்த்தார். மேலும் டெஸ்ட் அரங்கில் இந்த சாதனையைத் தனது 27ஆவது இன்னிங்ஸில் பதிவுசெய்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக மைல்கல்லை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் கேப்டன் தோனியின் (32 இன்னிங்ஸ்) சாதனையைத் தகர்த்தார். சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வெற்றியின் விளிம்பு வரை பண்ட் அழைத்துச் சென்றார்.

மொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் ரிஷப் பண்ட்டின் ஆட்டம் சிறப்பானதாக இருந்துள்ளது. இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் பிரிஸ்பேன் டெஸ்டில் ரிஷப் பண்ட் கடைசி வரை நின்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அதுமட்டுமில்லாமல் மந்தமான டெஸ்ட் போட்டியை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றினார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 1988 வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வியைச் சந்தித்தது. அதேபோல இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 300 ரன்களுக்கும் மேல் உள்ள இலக்கை ஒரு முறை கூட எட்டியது கிடையாது. கடந்த 2014 மற்றும் 1977இல் அடிலைட் மட்டும் பிரிஸ்பேனில் இந்த இலக்கை நெருங்கியது. ஆனால் அப்போதும் எட்டவில்லை தற்போது 328 ரன்களை வெற்றிகரமாக எட்டி புதிய சரித்திரம் படைத்தது இந்திய அணி.

Views: - 8

0

0