அன்று ஆண்டர்சன்… இன்று ஆர்ச்சர்… அலறவிட்ட ரிஷப் பண்ட்!

Author: Udhayakumar Raman
12 March 2021, 7:35 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் ரிவர்ஸ் சுவீப் செய்து சிக்சர் பறக்கவிட்டது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதில் இந்திய அணியில் எதிர்பார்த்தது போல ராகுல், பண்ட் வாய்ப்பு பெற்றனர். ஆனால் முதல் இரண்டு போட்டியில் துவக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பட்லர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. ஆனால் இளம் ரிஷப் பண்ட், இந்திய கேப்டன் விராட் கோலி அவுட்டான பின் நான்காவது வீரராக களமிறங்கினார். போட்டியின் நான்காவது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். இதில் சமீபத்தில் இதே மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் ஆண்டர்சன் வேகத்தில் ரிவர்ஸ் சுவீப் செய்தது போலவே, இந்த போட்டியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் ரிவர்ஸ் சுவீப் செய்து சிக்சர் அடித்தார்.

ரிஷப் பண்ட் அடித்த இந்த சிக்சர் தற்போது சமூக வலைதளத்தில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பவர் ப்ளே எனப்படும் முதல் 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Views: - 56

0

0

1 thought on “அன்று ஆண்டர்சன்… இன்று ஆர்ச்சர்… அலறவிட்ட ரிஷப் பண்ட்!

Comments are closed.