‘தாதா’ கங்குலி… ‘தல’தோனியின் ஆரா… இவரிடம் இருக்கு: எதிர்கால இந்திய கேப்டன் இவர் தான்: அடித்துச்சொல்லும் ஓஜா!

28 April 2021, 7:49 pm
Quick Share

இளம் வீரர் ரிஷப் பண்ட் இடம் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனியின் ஆரா உள்ளதாகவும் அவர் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வர வாய்ப்புள்ளதாகவும் முன்னாள் இந்திய வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த ரிஷப் பண்ட் வெற்றியை வெறும் 1 ரன்னில் இழந்தார்.

இந்த போட்டிக்கு பின்பாக முன்னாள் இந்திய வீரரான பிரக்யான் ஓஜா முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரின் ஆரா ரிஷப் பண்ட் இடம் உள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் வாய்ப்புள்ளதாகவும் ஓஜா தெரிவிட்துள்ளார். இது குறித்து ஓஜா கூறுகையில், “ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவரின் அணியை வழிநடத்தும் பொறுப்பை பார்க்கும்பொழுது இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த கேப்டனாக பண்ட் உருவெடுப்பார் என்று தோன்றுகிறது. அதே போல அவரின் பேட்டிங்கும் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

அவரது பேட்டிங்கில் நல்ல முதிர்ச்சி காணப்படுகிறது. கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து அவர் பேட்டிங் செய்வது கண்கூடாகவே தெரிகிறது. ஒரு வீரரை பற்றி பேசும்போது அவரை சுற்றியுள்ள ஆரா அவரை தெளிவாக புரிய கைகொடுக்கும். அதை வைத்து பார்க்கும் பொழுது ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஆகும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதே போன்ற ஆரா உணர்வை நான் முன்னாள் கேப்டன் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி இடம் கண்டுள்ளேன். அதனால்தான் நான் இதை உணர முடிகிறது. ஆனால் தற்போதைய நிலையில் ஒரு வீரராகவும் தலைமை பொறுப்பை கொண்டுள்ளவராகும் அவர் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில் இதை நிச்சயமாக பண்ட் கற்றுக் கொள்வார் என நினைக்கிறேன்” என்றார்.

Views: - 232

0

0