ரோஹித் அடித்த ‘சிக்சர் ஷாட்‘ : பேருந்தில் பந்து விழுந்த வீடியோ வைரல்!!

10 September 2020, 12:13 pm
Rohit Sharma- updatenews360
Quick Share

கொரோனா தொற்றால் எந்த சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. பின்னர் சில தளர்வின்றி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பபார்த்துள்ள ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

இதற்காக ஐபிஎல் அணிகள் துபாயில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா, அடிக்காத ஷாட் இல்லை, எந்த பக்கம் வந்தாலும் பந்தை காட்டுத்தனமாக அடித்து விளையாடுவதில் வல்லவர் என பெயர் வாங்கியவர்.

இந்த நிலையில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மேற்கொண்டு வலைப்பயிற்சி ஆடி வரும் வீடியோ டிவிட்டரில் நேற்று வெளியானது. அந்த வீடியோவில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்தை ரோஹித் சர்மா சிக்சராக விளாசி தள்ளியுள்ளார்.

ஆனால் அந்த பந்து மைதானத்தை கடந்து சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மேற்கூரையில் விழுந்தது. இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0