இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் இரட்டை சதம்: 8000 ரன்கள் பட்டியலில் இணைந்து அசத்தல்!

16 January 2021, 4:17 pm
root - double century - updatenews360
Quick Share

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோ ரூட் 228 ரன்கள் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 421 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் ரூட் டெஸ்ட் அரங்கில் 8000 ரன்கள் என்ற புது மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய எட்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய ஏழாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார் ஜோ ரூட்.

ஜோ ரூட் தனது 98 டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய அசத்தியுள்ளார். முன்னதாக இங்கிலாந்தின் அலஸ்டேர் குக், கிரஹாம் கூச், ஜெப்ரே பாய்காட், அலக் ஸ்டூவர்ட், கெவின் பீட்டர்சன் மற்றும் டேவிட் குரோவர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்நிலையில் இந்த மைல்கல்லை 100 டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக எட்டிய ஒரே இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்த அசத்தினார் ஜோ ரூட்.

ஜோ ரூட் தனது 100வது டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிராக சென்னையில் நடக்க உள்ள முதல் டெஸ்டில் எட்டுவார். இதற்கிடையில் இப்போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்திய ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் தனது 4வது இரட்டை சதத்தைப் பதிவு செய்து மிரட்டினார்.

கடந்த 2012ல் இலங்கை மண்ணில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது. அதேபோல கடந்த 2018ல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி இங்கிலாந்து அணி வரலாறு படைத்தது. அப்போது இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3- 0 என கைப்பற்றி சரித்திரம் படைத்தது. இந்நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 158 ரன்கள் பின்தங்கியுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது. இன்னும் முழுமையாக இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளதால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Views: - 12

0

0