சென்னை அணிக்கு 5வது தோல்வி : மீண்டும் மோசமான ஆட்டம்…மங்கியது பிளே ஆப் வாய்ப்பு..!!

By: Udayaraman
10 October 2020, 11:21 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவிற்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய அந்த அணிக்கு வழக்கம் போல, பல்லீகல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கோலி, தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும், பின்னர் அதிரடி காட்டினார். பல்லிகல் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும், கோலி தனது ஆட்டத்தின் வேகத்தை குறைக்காமல் விளையாடினார். இதனால், அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியில் வந்த துபேவும் (22) கைகொடுக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்திருந்தார்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க மோசமானதாக அமைந்தது. ராயுடு, ஜெகதீசன் இருவரும் அணிக்கு நிதானமாக ரன்களை சேர்த்தனர். இருப்பினும், பெரிய அளவில் யாரும் ரன்களை குவிக்காததால் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், ஜெகதீசன் 33 ரன்களும் எடுத்தனர்.

இதன்மூலம் 5வது தோல்வியை சந்தித்த சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு சந்தேகமாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரூ அணி 4வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

Views: - 63

0

0