வான வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ் : கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரூ அபார வெற்றி

Author: Udayaraman
12 October 2020, 11:34 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரூ அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச், படிக்கல் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். படிக்கல் (32), பின்ச் (47) ரன்களில் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து வந்த கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி அபாரமாக ஆடியது.

குறிப்பாக, டிவில்லியர்ஸ் வான வேடிக்கை காட்டினார். அவர் வெறும் 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை சேர்த்தது. டிவில்லியர்ஸ் 73 (33) ரன்களுடனும், கோலி 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். கில்லை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸலும் ஏமாற்றம் கொடுத்தார். 100 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 8 விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் கொல்கத்தா அணியால் 112 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக 5வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.

Views: - 48

0

0