ஸ்டோக்ஸின் இடத்தை நிரப்புவாரா மில்லர்…? டெல்லியை வீழ்த்த துணிந்த சாம்சன்..!!! இரு அணியிலும் முக்கிய மாற்றங்கள்..!!

15 April 2021, 7:20 pm
rr vs dc - updatenews360.jpg
Quick Share

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் டெல்லி அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. பண்ட் தலைமையிலான இந்த அணியில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவானின் நல்ல ஃபார்ம், அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. வேகப்பந்து புயல் காஜிசோ ரபடா தனிமைப்படுத்துதல் நாட்கள் முடிந்து திரும்புவது அந்த அணியின் பந்து வீச்சு பலத்தை அதிகரிக்கும்.

அதேவேளையில், 222 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திச் சென்று வெற்றியை கோட்டை விட்டாலும், 210 ரன்களை கடந்தது அந்த அணிக்கு கூடுதல் தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கையில் ஆபரேஷன் செய்து இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆடமுடியாத நிலையில், எலும்பு முறிவு காரணமாக பென் ஸ்டோக்ஸின் விலகலும் போட்டியில் இருந்து விலகி இருப்பது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அதிரடி வீரர் டேவிட் மில்லர் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல, சுழற்பந்து வீச்சாளர் கோபாலுக்கு பதிலாக உனத்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, டெல்லி அணியும் லலித் யாதவ் முதல்முறையாக களம் காண்கிறார். முக்கிய வீரர் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையிலும், மில்லர் மற்றும் ஒருசில வீரர்களின் மீதான நம்பிக்கையில் சாம்சன் சேசிங்கை தேர்வு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Views: - 19

0

0