ஐசிசியின் அடுத்த தலைவர் பதவி அந்த இந்திய வீரருக்குதான் பொருந்தும் : கிரேம் சுமித் கூறும் அந்த வீரர் யார்…?

22 May 2020, 1:24 pm
greme smith - ICC - ganguly - updatenews360
Quick Share

ஐசிசி தலைவர் பதவியை வகித்து வரும் இந்தியாவின் ஷசாங் மனோகரின் பதவி காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்தப் பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், ஐ.சி.சி.யின் தலைவர் பதவி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலிக்குதான் பொருத்தமானதாக இருக்கும் என தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனருமான கிரேம் சுமித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

UpdateNews360_SouravGanguly

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது :- கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, ஐசிசிஐ வரிநடத்த திறமையான தலைமை தேவைப்படும். சிறந்த தலைமை பண்போடு, தற்போதைய கால கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருப்பவர்தான் ஐசிசி தலைவராக பொறுப்பேற்பது அவசியம். இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பொருத்தமாக இருப்பார். அவரை தேர்வு செய்ய வேண்டும். கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த அவரை போன்றவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பானதாக மாறும், எனக் கூறினார்.

Leave a Reply