ரிஷப் பண்ட்டிற்கு பின் இந்த சாதனையை படைத்த இரண்டாவது இந்தியரானார் சார்துல்!

17 January 2021, 7:17 pm
Shardul Thakur - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சார்துல் தாகூர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் விசித்திரமான சாதனை படைத்து அசத்தினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடக்கிறது/. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 33 ரன்கள் முன்னிலை கொடுத்து. இதற்கிடையில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் தடுமாறியது.

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் சார்துல் தாகூர் ஆகியோர் பேட்டிங்கில் பெரிய அளவில் கைகொடுத்து இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் சார்துல் தாகூர் கம்மின்ஸ் வீசிய பந்தில் சிக்சர் அடித்து தனது ரன் கணக்கைத் துவங்கினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ரன் கணக்கை சிக்சர் மூலம் துவங்கிய இரண்டாவது இந்தியர் என்ற புதிய சாதனை ஒன்றைப் படைத்தார்.

முன்னதாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் அரங்கில் தனது ரன் கணக்கை சிக்சர் அடித்துத் துவங்கினார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1 – 1 எனச் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கு இடையே பரபரப்பான மோதல் காணப்படுகிறது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அனுபவமற்றவர்களாக இருந்தபோதும் அதை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் திணறடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல பவுலர்களாக இருந்த நிலையிலும், அவர்கள் தற்போது பேட்டிங்கிலும் கை கொடுத்துள்ளது இந்திய அணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. இந்திய அணியின் பிரதான பேட்ஸ்மேன்களின் சொதப்பிய போதும் அந்த சரிவில் இருந்து மீட்டதை அனைவரும் பாராட்டியுள்ளனர். அவர்களின் பொறுப்பைப் பார்த்து இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களுக்குரிய கடைசி வாய்ப்பாக உள்ள இரண்டாவது இன்னிங்சில், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Views: - 3

0

0