அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்!!

Author: kavin kumar
25 August 2021, 8:44 pm
Quick Share

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருக்கும் ஆன போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் செரீனா வில்லியம்ஸ். 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் இந்த அதிர்ச்சிகரமான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“மருத்துவர்களின் பரிசீலனைக்கு பின்னர் அவர்களது ஆலோசனையின் படி எதிர்வரும் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து நான் விலகுகிறேன். தொடை பகுதியில் தசை நார் சிதைவு (கிழிவு) காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இப்போதைக்கு நான் அந்த காயத்தை ஆற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார் செரீனா. கடைசியாக கடந்த 2017-இல் அமெரிக்க ஓபன் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. நடால், ஃபெடரர் மற்றும் டொமினிக் திம் மாதிரியான முன்னணி வீரர்களும் 2021 அமெரிக்க ஓபனிலிருந்து விலகி உள்ளனர்.

Views: - 503

0

0