டென்னிஸ் வரலாற்றில் முதல்முறை… காயம் காரணமாக விம்பிள்டன் போட்டியில் முதல்சுற்றில் கண்ணீருடன் விலகினார் செரீனா (வீடியோ)

Author: Babu Lakshmanan
30 June 2021, 3:35 pm
serina crying- - updatenews360
Quick Share

காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் விலகினார்.

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சஸ்னோவிக்கை எதிர்கொண்டு விளையாடினார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். முதல் செட்டில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து அவர் விளையாடினார். ஆனால், 3-3 என செட் சமனடைந்த நிலையில், மேற்கொண்டு விளையாட முடியாது எனக் கூறி, விம்பிள்டனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், சஸ்னோவிக் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டு, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

அவரது டென்னிஸ் வரலாற்றில் முதல்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் வெளியேறுகிறார். எனவே, இதனை தாங்க முடியாத அவர் கண்ணீருடன் வெளியேறினார்.

கடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவிய செரீனா, விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 511

0

0