இவர் போலார்டைவிட ரொம்ப டேஞ்சர்: தமிழக வீரரை புகழ்ந்த கும்ப்ளே!

5 April 2021, 8:51 pm
Quick Share

தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கெய்ரான் போலார்டை நினைவுபடுத்துவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுபவர் கெய்ரான் போலார்டு. குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் போலார்ட்டை நினைவுபடுத்தும் வித மாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் விளையாடுவதாக பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து கும்ப்ளே கூறுகையில், “ஒரு சில நேரத்தில் ஷாருக்கான் எனக்கு போலார்ட்டை நினைவுபடுத்துகிறார். நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக செயல்பட்டுக் கொண்டிருந்த போது வலைப்பயிற்சியில் போலார்டுக்கு சில நேரத்தில் பவுலிங் செய்வேன். அப்போது அவரிடம் நான் நிறைய தடவை நேரடியாக இறங்கிய உடனே தாக்குதல் ஆட்டத்தில் இறங்க வேண்டாம் என்று பலமுறை தெரிவித்துள்ளேன். ஆனால் இங்கே நான் பவுலிங் செய்ய கூட முயற்சிக்க வில்லை. ஏனென்றால் எனக்கு தற்போது வயது அதிகரித்து விட்டது. இனிமேல் என்னால் பவுலிங் செய்ய இயலாது. அதனால் நான் நிச்சயமாக ஷாருக்கானுக்கு பவுலிங் செய்ய மாட்டேன்”என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகாத ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை தொகை ரூபாய் 20 லட்சமாக இருந்தது. ஆனால் இவரை எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி இடையே மும்முனை போட்டி நிலவியது. இதில் இறுதியாக ரூபாய் 5.75 கோடியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷாருக்கானை ஏலத்தில் எடுத்தது.

இதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடர்கள் தமிழக அணி இரண்டாவது முறையாக பட்டம் வெல்ல ஷாருக்கான் மிக முக்கிய பங்கு வகித்தார். பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் போட்டியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

Views: - 2

0

0