கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியில் ஈடுபடும் ஸ்ரேயாஸ் ஐயர்….!

13 May 2021, 9:09 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய அணியில் விளையாடும் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது தோள்பட்டை பகுதியில் காயமடைந்தார். இதற்காக ஆபரேஷன் செய்து கொண்டார். இவர் இந்த காயத்தில் இருந்து முழுமையாக தற்போதும் குணமடையாத நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்பதால் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்திலும் ஸ்ரேயாஸ் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இங்கே வேலைநடக்கிறது. கவனம் தேவை” என அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர் ஜூலை மாதம் துவங்கவுள்ளதால் அதற்குள் ஸ்ரேயாஸ் முழுமையாக குணமடைய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 443

0

0