இதில் கோலி என்னிடம் எப்போதும் தோற்றுப்போவார்: கில்!

13 May 2021, 7:50 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சுப்மான் கில் இந்திய கேப்டன் விராட் கோலி தன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டிய திறமை என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் சுப்மான் கில். சமீபகாலமாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இவர் தன்னை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தி தனது திறமையை நிரூபித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக அறிமுகமான இவர், தனியார் நிறுவனம் நடத்திய பேட்டியில் கலந்து கொண்டார்.

அதில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தான் கற்றுக்கொடுக்க விரும்பும் திறமை ஒன்று குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கில் கூறுகையில், “ஒரே ஒரு விஷயம் தான். அது ஃபிபா விளையாட்டு. இதை விளையாட கோலி கண்டிப்பாக விரும்பமாட்டார். ஏனென்றால் எப்பொழுதும் இந்த போட்டியில் அவர் என்னிடம் தோல்வியை சந்திப்பார்” என்றார். இந்தியாவில் சமீபத்தில் நடந்த 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கில் விளையாடினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் செய்பர்ட்டுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் கில் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்பிறகு தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவர் இடம்பிடித்துள்ளார். இவர் இந்திய அணியின் அனுபவ துவக்க வீரரான ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

Views: - 425

0

1