தொடரை வென்ற கையோடு தந்தையின் சமாதியில் சிராஜ் மரியாதை : வைரலாகும் புகைப்படம்..!!

21 January 2021, 5:11 pm
siraj crying - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்த போது, இந்திய வீரர் சிராஜ் முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாகினார். சிராஜின் தந்தை ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர். கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற சிராஜின் கனவு நினைவாக உறுதுணையாக இருந்துள்ளார்.

இதனிடையே, சிராஜின் தந்தை கடந்த நவம்பர் 20 ஆம் தேதி காலமானார். ஆனால், அவர் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல், தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சிராஜின் பந்து வீச்சு முக்கியமானதாக இருந்தது. தொடரை வென்ற இந்திய அணி வீரர்கள், இன்று தாயகம் திரும்பினர்.

இந்த நிலையில், சொந்த ஊரான ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வந்த சிராஜ், நேராக தந்தையின் சமாதிக்கு சென்று மரியாதை செய்தார். அப்போது, தங்க மத வழக்கப்படி வழிபாடு செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். சிராஜின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0