சீராக உள்ள சவுரவ் கங்குலியின் உடல் நிலை… தனி அறைக்கு மாற்றப்பட்டார்!

29 January 2021, 9:08 pm
Quick Share

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல் நிலை இரண்டு ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்ட பின் சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.

இவரின் உடல் நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் ஆராய்ந்து, அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ள இருந்த நிலையில், நேற்று திடீரென மீண்டும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவருக்கு மேலும் இரண்டு ஸ்டென்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவருக்கு நேற்று மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இவரின் இதயத்தில் இருந்த அடைப்பை நீக்குவதற்காக இரண்டு ஸ்டண்ட்கள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளதாக தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல இவரை கிரிட்டிகல் கேர் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சவுரவ் கங்குலி டாக்டர் அப்தாப் கான் மற்றும் டாக்டர் அஸ்வின் மேத்தா மேற்பார்வையில் கண்காணிக்கப்பட்டுவருகிறார். அவரின் உடல் நிலை சீராக உள்ளது. மேலும் அவர் கிரிட்டிகல் கேர் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0