தென்ஆப்பிரிக்கா வீரர் காலிஸுக்கு ‘ஹால் ஆப் பேம்’ விருது : சாதனைகளுக்கு கிடைத்த கவுரவம்!!

23 August 2020, 5:15 pm
Jacques-Kallis-updatenews360
Quick Share

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவ்வளவு எளிதில் எட்டிவிட முடியாத சாதனைகளை படைத்தவர்களை ‘ஹால் ஆப் பேம்’ என்னும் புகழ்மிக்கவர்களின் பட்டியலில் சேர்த்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்தப் பட்டியலில் தென்னாப்ரிக்கா அணியின் தலைசிறந்த முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸை இணைக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 13,289 ரன்னும் எடுத்து, உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார். அதோடு, தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா தாலேகர் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.