டக்கு டக்குவென விக்கெட்டை இழந்த இந்திய அணி.. ஜோகன்னஸ்பெர்க் டெஸ்டில் சோகம்… தென்னாப்ரிக்காவுக்கு 240 ரன்கள் இலக்கு..!!!

Author: Babu Lakshmanan
5 January 2022, 6:19 pm
Quick Share

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 240 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகறிது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்ரிக்கா 229 ரன்களும் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை, 2வது நாளான நேற்று இந்திய அணி தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு புஜாரா (58), ரகானே (56) ஆகியோர் ஓரளவுக்கு கைகொடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷர்துல் தாகூர் (28) மட்டும் சற்று ரன்களை சேர்த்தார். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால், இந்திய அணி 266 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹனுமா விஹாரி 40 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன்மூலம், தென்னாப்ரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்கள் எஞ்சியிருப்பதால், இந்தியா விக்கெட்டுக்களை கைப்பற்றினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 629

0

0