வேகம் காட்டிய தெ.ஆப்ரிக்கா… 3 நாளில் முடிந்த முதல் டெஸ்ட்… வழக்கம் போல மண்ணைக்கவ்விய வெ.இண்டீஸ்..!!

13 June 2021, 11:49 am
sa win - updatenews360
Quick Share

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென்னாப்ரிக்காவின் வேகப்பந்த வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த தென்னாப்ரிக்க அணி டிகாக்கின் சிறப்பான சதத்தால், 322 ரன்கள் எடுத்தது. 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2வது நாள் ஆட்டநேர முடிவில் 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர், 3வது நாள் ஆட்டம் தொடங்கியதும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தென்னாப்ரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம், தென்னாப்ரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிகாக் தேர்வு செய்யப்பட்டார்.

Views: - 341

0

0