10 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியின் நாயகனான ‘ஜோசுவா செப்டெகி’ : மலைக்க வைத்த உலக சாதனை..!

By: Babu
8 October 2020, 1:31 pm
athelet - updatenews360
Quick Share

ஸ்பெயினின் வேலண்சியா நகரில் தடகள போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் என வெறும் 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் தடகளப் போட்டியின் 10,000 மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (24) கலந்து கொண்டார். இவர் பந்தய இலக்கை 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் கடந்தார். இதன்மூலம், 2005ம் ஆண்டு எத்தியோப்பிய வீரர் கெனெனிசா பெகெலே (26 நிமிடங்கள் 17.53 வினாடிகள்) சாதனையை முறியடித்துள்ளார்.

இவர், கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் தங்கமும், ஆகஸ்ட் மாதம் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதேபோல, மகளிர் பிரிவுக்கான 5 ஆயிரம் மீட்டர் தடகள போட்டியில், எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை லெடிசென்பெட் கிடி ( 22) பந்தய தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலக சாதனையை படைத்துள்ளார்.

Views: - 72

0

0