கடைசி நேரத்தில் சுதாரித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 150 ரன்களை எட்டிய மும்பை இந்தியன்ஸ்!

17 April 2021, 9:23 pm
Quick Share

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் சென்னையில் நடக்கும் இன்றைய 9வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியில் விராட் சிங், அபிஷேக் சர்மா, முஜீப் மற்றும் கலீல் அஹமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில், மார்கோ ஜேன்சனுக்கு பதிலாக ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குயிண்டன் டி காக் (40) மற்றும் கேப்டன் ரோகித் சர்மா (32) நல்ல அடித்தளம் கொடுத்தனர். பின் வந்த சூர்யா குமார் யாதவ் (10) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த இஷான் கிஷான் (12) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின் வந்த ஹர்திக் பாண்டியா (7) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் போலார்டு ஓரளவு அதிரடி காட்ட 35* மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் அடித்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : டேவிட் வார்னர்(கே),ஜானி பேர்ஸ்டோவ், மணீஷ் பாண்டே , விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, அப்துல் சமாத், ரசித் கான், புவனேஷ்வர் குமார், முஜீப் உர் ரஹ்மான், கலீல் அஹமது.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கே), குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, கெய்ரன் போலார்டு, குர்னால் பண்டியா, ராகுல் சஹார், ஆடம் மில்னே,ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் பவுல்ட்.

Views: - 54

0

0