தல தோனியின் கடக்நாத் சிக்கன் பிஸ்னஸுக்கு இவர் செம்ம டப் கொடுப்பாரு போலயே: இலங்கை வீரரை ஓட்டிய ரசிகர்கள்!

14 January 2021, 9:53 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன இலங்கை வீரர் குசல் மெண்டிஸை ரசிகர்கள் படுமோசமாக சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 135 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்நிலையில் இலங்கை வீரர் குசல் மெண்டில் இதில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் மூலம் தொடர்ச்சியாக 4 வது இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார் மெண்டிஸ். தவிர முதல் ஆறு இடங்களுக்குள் களமிறாங்கி தொடர்ச்சி அதிக முறை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறிய வீரர்கள் பட்டியலில் பங்கஜ் ராய், மோஹிந்தர் அமர்நாத், மார்க் வாக் ஆகியோருடன் இணைந்துள்ளார். இப்பட்டியலில் டேனி மோரிசன் (5 முறை) முதலிடத்தில் உள்ளார்.

இவர் இந்த மோசமான சாதனையை எட்டிய சிறிது நேரத்திலேயே குசல் மெண்டிஸை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்க்கத் துவங்கினர். சிலர் இவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் ஒரு ரசிகர் இவர் டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக டக் அவுட்டாவதை குத்திக்காட்டும் விதமாக முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் கடக்நாத் சிக்கன் பிஸ்னஸுக்கு இவர் செம்ம டப் கொடுப்பாரு போலயே என நக்கலான பதிவை வெளியிட்டுள்ளார்.

Views: - 12

0

0