அனுபவமில்லாத சக்காரியா…கடைசி ஓவரில் வெற்றியை இலங்கைக்கு தூக்கி கொடுத்த இளம் இந்தியா…!!

Author: Udayaraman
28 July 2021, 11:37 pm
Quick Share

இந்திய அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சகாரியா மற்றும் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 29 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்களும் சேர்த்தனர்.

இலங்கை தரப்பில் அகிலா தனஞ்செயா 2 விக்கெட் எடுத்தார். துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிக்சா 11, சமராவிக்ரமா 8, சனகா 3, மெண்டீஸ் 2, மினோட் பனகா 36, ஹசரங்கா என வீரர்கள் அடுத்தடுத்த வெளியேறினர். 17.2 ஓவரில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து இருந்தது. இந்நிலையில் தனஜெயா-கருரத்னே ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

அந்த ஜோடி புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபமில்லாத இளம் இந்திய பந்துவீச்சாளர் சக்காரியா இரு ஒய்டுகளை வீசி, அந்த அணி எளிதில் வெற்றிபெற காரணமாக இருந்தார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை சமன் செய்துள்ளது.

Views: - 257

0

0