இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது அதானிக்கு எதிரான போராட்டத்தால் ஷாக்..!

27 November 2020, 4:31 pm
india_vs_aus_adani_updatenews360
Quick Share

கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் அனைத்து பாதுகாப்புக்களையும் மீறி, இரண்டு எதிர்ப்பாளர்கள் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் நுழைந்து, இந்தியாவின் அதானி குழுமத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உலகெங்கிலும் கொரோனாவால் கிரிக்கெட் விளையாட்டுகள் ரசிகர்கள் இல்லாமல் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்திய-ஆஸ்திரேலிய இருதரப்புத் தொடரின், முதல் ஒரு நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் 50% இருக்கைகளில் ரசிகர்களை நிரப்ப ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆறாவது ஓவர் வீசுவதற்கு முன், யாரும் எதிர்பாராத வகையில், ஆஸ்திரேலியாவில் நிலக்கரித் திட்டத்தை மேற்கொள்ளும் இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்தை கண்டிக்கும் ஒரு பதாகையை ஏந்தி, இருவர் மைதானத்தில் வலம் வந்தனர்.
பின்னர் இருவரும் பாதுகாப்பாக பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்திற்கு எதிர்ப்பு ஏன் ?
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், நிலக்கரி எடுக்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டம் ஒப்புதல் பெறுவதில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பின்னர் இந்த போராட்டம் ஆஸ்திரேலியா முழுவதும் பரவியது. அதானி நிறுவனத்திற்கு எதிராக “கோ பேக்” போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு இந்தியாவின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, கடன் தர உள்ளதை இந்தியர்களுக்கு வெளிப்படுத்தவே, சரிக்கட்டி போட்டியில் இடையூறு செய்து, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 34

0

0