டேவிட் வார்னர் நீக்கம் ஹைதராபாத் அணி பீல்டிங்!!

2 May 2021, 3:16 pm
Quick Share

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இதுவரை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், சுசீத் மற்றும் சித்தார்த் காவுல் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது நபி, புவனேஸ்வர் குமார், மற்றும் அப்துல் சமாத் அணியில் சேர்க்கப்பட்டனர். இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உனத்கத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தியாகி அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் சிவம் துபேவிற்கு பதிலாக அனுஜ் ரவாத் வாய்ப்பு பெற்றார்.

அணி விவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: ஜாஸ் பட்லர், யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், அனுஜ் ரவாத், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவாதியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி கிறிஸ் மோரிஸ், சேட்டன் சகாரியா, முஸ்தபிசுர் ரஹ்மான்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி: அப்துல் சமாத், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, விஜய் சங்கர், முகமது நபி, கேதர் ஜாதவ், ரசித் கான், சந்தீப் சர்மா, சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது.

Views: - 110

0

0

Leave a Reply