பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பவுலிங்!

14 April 2021, 7:09 pm
Quick Share

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னையில் நடக்க உள்ள இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி தோல்வியைச் சந்தித்ததால் இந்த முறை தங்களின் முதல் வெற்றியை நோக்கிக் களமிறங்குகிறது. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 2-வது வெற்றியை நோக்கிக் களமிறங்குகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் திரும்பினார்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணி: விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், சபாஷ் அஹமது, கிளன் மேக்ஸ்வெல், ஏபி டிவிலியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமிசன், ஹர்சல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத்: விர்திமான் சகா, டேவிட் வார்னர் (கே), மணீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவ், விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரசித் கான், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், சபாஷ் நதீம்.

Views: - 19

0

0