பெங்களூரூவுக்கு ‘குட்-பை’ சொன்ன ஐதராபாத் : வில்லியம்சனின் அபார ஆட்டத்தால் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!!

6 November 2020, 11:14 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூ அணியை வீழத்தி குவாலிபயர்-2 சுற்றுக்கு முன்னேறியது ஐதராபாத் அணி.

அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு கோலி, படிக்கல் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இருப்பினும், பின்ச் (32), டிவில்லியர்ஸ் (56) கைகொடுக்க ரன் விகிதம் சற்று உயர்ந்தது. பின்னர், வந்த வீரர்கள் ஓரளவிற்கு ரன்களை சேர்க்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் சேர்த்தது.

எளிய இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வார்னர் (17), மணீஷ் பாண்டே (24) மட்டும் ஓரளவுக்கு ரன்களை குவித்தனர். எஞ்சிய வீரர்கள் விக்கெட்டை இழந்து ஏமாற்றினர். இருப்பினும், வில்லியம்சன் மட்டும் அணியின் வெற்றிக்காக தனிமனிதனாக போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஹோல்டர் இரு பவுண்டரிகளை அடித்து அணியை திரில் வெற்றி பெறச் செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் வில்லியம்சன் 50 ரன்களும், ஹோல்டர் 24 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி குவாலிபயர்-2 க்கு தகுதி பெற்றுள்ளது.

வரும் ஞாயிற்றுகிழமை நடக்கும் குவாலிபயர்-2ல் டெல்லி, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Views: - 38

0

0