கோலி முதலில் ஐபிஎல்லை வெல்லட்டும்… ஐசிசி கோப்பையை அப்பறம் பாக்கலாம் : ரெய்னா கடும் விமர்சனம்..!!

12 July 2021, 4:20 pm
kohli - raina - updatenews360
Quick Share

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கடந்த மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே, 2017ல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2019ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் தோல்வியடைந்தது.

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், கோலியின் கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே, செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்கும் சென்னை அணியின் துணை கேப்டன் ரெய்னா, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- உலகின் தலைசிறந்த வீரர் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது சாதனைகளே அதனை விளக்கும். ஆனால், ஐசிசி கோப்பை பற்றி நீங்கள் கேட்டால், கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு கோப்பையையும் வென்றதில்லை. அவ்வளவு ஏன் ஒரு ஐபிஎல் கோப்பையைகூட அவரால் வெல்ல முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் எதிர்வரும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் மற்றும் அதன்பிறகு வரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை கோலிக்கு அவகாசம் இருக்கிறது. இந்த இரு தொடர்களிலும் கோலிக்கு வாய்ப்பளிக்கலாம். அதேபோன்று, இந்த இரு தொடர்களிலும் இறுதிக்கட்டத்திற்கு செல்வது என்பது எளிதான காரியமல்ல.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியா இழந்ததற்கு காரணம் வீரர்கள் சரியாக விளையாடாததே ஆகும். காலநிலையை குறை சொல்ல முடியாது, என்றார்.

Views: - 330

0

0