சுரேஷ் ரெய்னா உறவினர்கள் கொலை செய்யப்பட்டது இதற்குத்தான்..! துப்புத் துலக்கிய பஞ்சாப் காவல்துறை..!

16 September 2020, 4:42 pm
Suresh_Raina_UpdateNews360
Quick Share

சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான கொள்ளை கும்பலின் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என்று பஞ்சாப் மாநில அரசு கூறியுள்ளது.

“கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் சம்பந்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொலை வழக்கு, ஒரு கொள்ளை கும்பலின் மூன்று குற்றவாளிகளைக் கைது செய்வதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. மேலும் 11 குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.” பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பஞ்சாபில் உள்ள அவரது உறவினர்கள் தாக்கப்பட்டனர் மற்றும் அவரது மாமா படுகொலை செய்யப்பட்டார் என்பதையும் அது குறித்து பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை எனக் கூறினார்.

“பஞ்சாப்பில் என் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பது கொடூரத்திற்கு அப்பாற்பட்டது. என் மாமா படுகொலை செய்யப்பட்டார். என் புவா மற்றும் எனது உறவினர்கள் இருவருக்கும் கடுமையான காயங்கள் இருந்தன. துரதிஷ்டவசமாக என் உறவினரும் நேற்று இரவு உயிருக்கு போராடி காலமானார். என் புவா இன்னும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.” என ரெய்னா அப்போது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கொடூர கொலையால் பாதிப்பிற்குள்ளான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஆகஸ்ட் 29 அன்று இந்தியன் பிரீமியர் லீக்கின் வரவிருக்கும் சீசனிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பஞ்சாப் அரசு கொலை மற்றும் கொலைவெறித் தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிந்ததோடு, குற்றத்தில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்துள்ளது. ஆனால் மீதமுள்ள 11 குற்றவாளிகளை இன்னும் தேடி வருகிறது.

Views: - 9

0

0