வேட்டி வேட்டி கட்டு… வேட்டி வேட்டி கட்டு… தூக்குதுரை கெட்டப்பில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சின்ன ‘தல’ ரெய்னா!

14 April 2021, 2:15 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகப் பங்கேற்கும் சுரேஷ் ரெய்னா தமிழ் புத்தாண்டை வேட்டிக் கட்டி கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் கடந்தாண்டு சொந்த காரணங்களுக்காக விலகினார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா. இந்நிலையில் இந்தாண்டு மீண்டும் சிஎஸ்கே அணிக்காகக் களமிறங்கிய ரெய்னா, டெல்லி கேபிடஸ்ல் அணிக்கு எதிரான தங்களின் முதல் லீக் போட்டியில் 36 பந்தில் 54 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஆனால் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாகச் சென்னை அணிக்கு எதிராகத் தனது மூன்றாவது வெற்றியை டெல்லி கேபிடல்ஸ் அணி பதிவு செய்தது. இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை ரெய்னா வேட்டிக் கட்டி கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரெய்னா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்த புத்தாண்டு, இனிய துவக்கங்களும், புதிய முயற்சிகளும் நிறைந்த வருடமாக அமையட்டும். அனைவருக்கும் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். @ChennaiIPL”என அதில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக மீண்டும் சிஎஸ்கே ஜெர்சி அணிந்து களமிறங்கியது குறித்துப் பேசிய ரெய்னா, சிஎஸ்கே ஜெர்சி தனக்குக் கிடைத்த பெருமை என்றும் அதை தன் வாழ்நாள் முழுதும் நேசிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

வரும் 16ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களுக்குள் வெறும் 7 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது சென்னை அணி. இதிலிருந்து சென்னையை அணியை ரெய்னா சிறப்பாக மீட்டார் ரெய்னா.

Views: - 23

0

0