சையத் முஷ்டாக் அலி டிராபி : சாதிக்குமா தமிழகம்… நாளை ராஜஸ்தானுடன் மோதல்…!!!

28 January 2021, 5:38 pm
tamilnadu team - updatenews360
Quick Share

சென்னை : சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் அரையிறுதியில் தமிழக அணி, ராஜஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது.

50 ஓவர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர், கடந்த 10ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நாக் அவுட் சுற்றுக்கு தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஹரியானா, பரோடா, பீகார், ராஜஸ்தான் அணிகள் முன்னேறின.

காலிறுதியில் கர்நாடகத்தை வீழ்த்தி பஞ்சாப்பும், இமாச்சல பிரதேச அணியை தோற்கடித்து தமிழக அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. இதேபோல, ஹரியானாவை பரோடாவும், பீகாரை ராஜஸ்தானும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

முதல் அரையிறுதியில் தமிழகம் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 2006ம் ஆண்டு முதல் நடந்து வரை இந்தத் தொடரில் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணி, கடந்த ஆண்டு நடந்த இறுதிபோட்டியில் கர்நாடகாவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

இந்த நிலையில், 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் நாளைய போட்டியில் தமிழக வீரர்கள் களம் காண உள்ளனர்.

இதேபோல, 2வது அரையிறுதியில் பஞ்சாப் – பரோடா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வருகிற 31-ந்தேதி இறுதி போட்டி நடக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடக்கிறது.

Views: - 0

0

0