டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் போட்டி.. இந்திய அணி பேட்டிங்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 7:18 pm
IND Vs PAK - Updatenews360
Quick Share

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

ஐசிசி T20 உலகக் கோப்பை 2021 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற தகுதி சுற்றில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றிருந்த நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றனர். உலகக்கோப்பையில் முக்கிய போட்டிகளான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை செய்கிறது.

இன்றைய தினத்தின் 2வது போட்டியில் சூப்பர் 12 குரூப் 2-வில் உள்ள இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் – இந்தியா இரண்டு நாட்டு அணிகளும் நேருக்கு நேர் மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே அவற்றை சுற்றி ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது 2019ல் நடந்த ஐசிசி ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில்தான்.

ஐசிசி போட்டிகளில் மட்டும் மோதி வரும் இந்திய – பாகிஸ்தான் அணிகள், கடந்த 2007-ம் ஆண்டு அறிமுக உலக கோப்பையில் முதல் முறையாக மோதின. இதுவரை 8, 20 ஓவர் போட்டிகளில் 6 முறை இந்தியாவும், ஒருமுறை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு போட்டி கைவிடப்பட்டது.

இந்த நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் இன்றைய போட்டி உலகில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 513

0

0